ராமேஸ்வரம் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது சாலையோரம் நின்ற மக்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைகளை கேட்டறிந்தார்.
லாந்தையில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் காரை நிறுத்தி அவர் பேசினார். மழைக் காலங்களில் அங்குள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் அவ்வழியாக செல்லும் சுமார் 6 கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், இப்பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ரயில்வே அமைச்சரிடம் இவ்விவகாரம் பற்றி தாமே பேசுவதாக நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.