சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
பேரவைக் கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். பேரவையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தது குறித்து பேசிய தங்கம் தென்னரசு, 2012-இல் உருவாக்கப்பட்ட மீன்வளப் பல்கலைக் கழகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்டம் மசோதா 2020-இல் அ.தி.மு.க. ஆட்சியின் போது நிறைவேற்றி ஆளுநரிடம் அனுப்பப்பட்டதாகவும், இதுவரை ஒப்புதல் அளிக்கப்படாத அந்த மசோதாவை ஆளுநர் அண்மையில் திருப்பி அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
அரசியல் காழ்ப்புணர்வு இன்றி மீன்வளப் பல்லைக்கழகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்டும் மசோதாவையும் தற்போது பேரவையில் தாங்கள் திரும்ப நிறைவேற்றி இருப்பதாகவும் அவர் கூறினார்.