அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதோடு, கூடுதல் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர், செய்முறை தேர்வுக்கு 300 ரூபாயும், எழுத்து தேர்வுக்கு 150 ரூபாயும் வசூலிக்கப்பட்ட கட்டணம் 9 ஆண்டுகளுக்கு பிறகு 50 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது.
கட்டண உயர்விற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், உயர்கல்வித்துறை அமைச்சரின் உத்தரவின்படி நடப்பு பருவத் தேர்விற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவித்த துணை வேந்தர், அடுத்த கல்வியாண்டில் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.