​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதை பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத 6 உதவி ஆய்வாளர்கள்,16 காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை

Published : Nov 18, 2023 12:34 PM

போதை பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத 6 உதவி ஆய்வாளர்கள்,16 காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை

Nov 18, 2023 12:34 PM

சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக 6 உதவி ஆய்வாளர்கள், 16 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கவும், கடத்தல் கும்பலை பூண்டோடு கைது செய்யவும் "ட்ரைவ் அகைன்ஸ்ட் ட்ரக் " எனும் திட்டத்துடன் சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ரகசிய கண்காணிப்பில் சிக்கிய 6 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 16 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல்துறை ஆணையர்சந்தீப் ராய் ரத்தோர்
நடவடிக்கை எடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஆய்வாளர்கள்,உதவி ஆணையர்கள் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யாரும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் பாரபட்சம் காட்டுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.