​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெப்பநிலை உயர்வால் பனிக்கட்டி எதிர்பார்த்ததை விட வேகமாக உருகுகிறது... பூமியில் கடல் மட்டம் உயரும் அபாயம்

Published : Nov 18, 2023 12:01 PM

வெப்பநிலை உயர்வால் பனிக்கட்டி எதிர்பார்த்ததை விட வேகமாக உருகுகிறது... பூமியில் கடல் மட்டம் உயரும் அபாயம்

Nov 18, 2023 12:01 PM

உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் உருகுவது எதிர்பார்த்தை விட வேகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உலக சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்தால், பூமியில் கடல் மட்டம் 40 அடி உயரும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கடலோரத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகளின் COP28 காலநிலை மாநாட்டில் பங்கேற்கும் சர்வதேச தலைவர்கள் கவனம் செலுத்துமாறும் ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேரழிவுகளைத் தவிர்க்க உலக காலநிலையில் மறுகட்டமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.