சென்னையில், 12 துறைகளின் தடையில்லாச் சான்றிதழ் ஒருங்கிணைப்பு சேவையை தொடங்கி வைத்ததோடு, வீடு மற்றும் மனை வாங்குவோருக்கான விழிப்புணர்வு சித்திர கதை கையேட்டையும் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட 1179 விண்ணப்பங்களில், 820 விண்ணப்பங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்படுள்ளதாக அந்த குழுமத்தின் தலைவரும் அமைச்சருமான சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மனைப் பிரிவிற்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இன்று முதல் முழுமையாக இணையவழி மூலம் பெறப்பட்டு, பரிசீலனைக்குப் பின் திட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.