திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், வெள்ளி விமானத்தில் மாட வீதிகளில் உலா வந்த பஞ்ச மூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.