சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற பாகுபலி ராக்கெட்டின் உடற்பகுதி பசிஃபிக் கடலில் விழுந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை ஏந்திக் கொண்டு எல்.வி.எம்.-3 மாக்-4 ராக்கெட் விண்ணுக்கு சென்றது.
ஏவப்பட்ட 15 நிமிடங்களில் பூமியில் இருந்து 180 கிலோ மீட்டர் உயரத்தில் பாகுபலி ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது.
அதன் பிறகு 124 நாட்களாக தாழ்வான புவி வட்டப்பாதையில் செயலின்றி சுற்றிக் கொண்டிருந்த பயில்வான் ராக்கெட்டின் உடற் பகுதியை சர்வதேச விதிமுறைகளின் படி அகற்ற இஸ்ரோ முடிவு செய்தது.
இதன் பேரில் ராக்கெட்டின் செலிழந்த உடற்பகுதி இந்திய நேரப்படி செவ்வாயன்று பிற்பகல் 2-42 மணிக்கு பூமியின் காற்று மண்டலத்துக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அது கட்டுப்பாடின்றி பயணித்து பசிஃபிக் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.