அமெரிக்காவில் 62 வயது பெண்ணை நூதன முறையில் கொன்ற பெண் உதவியாளர் குற்றவாளி என தீர்ப்பு
Published : Nov 16, 2023 4:52 PM
அமெரிக்காவில் 62 வயது பெண்ணை நூதன முறையில் கொன்ற பெண் உதவியாளர் குற்றவாளி என தீர்ப்பு
Nov 16, 2023 4:52 PM
உயிரைக் கொல்லும் வீரியமிக்க கண் சொட்டு மருந்து கலந்த குடிநீரை கொடுத்து, அமெரிக்காவில் 62 வயது பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது பெண் உதவியாளர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் விஸ்கோசின் நகரை சேர்ந்த லைன் ஹெர்னன் என்பவர், உயிரற்று கிடப்பதாக உதவியாளர் ஜெஸி, காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து கைரேகை நிபுணர்களுடன் புலனாய்வு செய்த போலீஸ், உடல்கூறாய்வு பரிசோதனையில் லைன் ஹெர்னனின் ரத்தத்தில் சொட்டு மருந்து ரசாயணம் கலந்து இருந்ததை உறுதி செய்தனர்.
விசாரணையில் லைன் ஹெர்னனின் வங்கியில் இருந்து 3 லட்சம் டாலரை உதவியாளர் ஜெஸி திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து கிடுக்குப்படி விசாரணையில் ஜெஸிதான் குடிநீரில் உயிரைக் கொல்லும் வீரியமிக்க கண் சொட்டு மருந்தை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது.