இருட்டுக்குள் மறைந்திருந்து கார் மீது கருங்கல் வீசிய போலீஸ்காரர் பணி நீக்கம்..! டேஸ் காமிரா காட்சியால் அதிரடி நடவடிக்கை
Published : Nov 15, 2023 9:48 PM
இருட்டுக்குள் மறைந்திருந்து கார் மீது கருங்கல் வீசிய போலீஸ்காரர் பணி நீக்கம்..! டேஸ் காமிரா காட்சியால் அதிரடி நடவடிக்கை
Nov 15, 2023 9:48 PM
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் இருட்டுக்குள் மறைந்திருந்து வங்கி ஊழியரின் கார் மீது கல்லை போட்டு மறித்து , கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் காரின் டேஸ் காமிராவில் பதிவான காட்சிகளில் அடிப்படையில் தொடர்புடைய போலீஸ்காரரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இருட்டுக்குள் காரை வழிமறித்து பாறாங்கல்லை வீசும் இவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் கிடையாது... இருவரும் தமிழக காவல்துறையில் பணியில் இருந்த சகோதரர்களான ஜெகதீசன் மற்றும் தினேஷ்..!
மதுரை , மேலூர் அடுத்த அரிட்டாபட்டியை சேர்ந்த ஜெகதீசன், சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை காவல்நிலையத்தில் வேலை பார்த்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இவரது தம்பி தினேஷ் மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி காவல்நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார்.
இவர்களின் குடும்பத்தினருக்கும் சென்னை தனியார் வங்கியில் பணியாற்றும் அதே ஊரை சேர்ந்த வடிவேலன் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக அரிட்டாபட்டி சாலையில் காரில் வடிவேலன் வந்தபோது ஆண்டிக்கோவில் அருகே காரை வழி மறித்து காரின் மீது கல்லை தூக்கிப் போட்டு அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து வடிவேலனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகவும், அவர் காரை கிளப்பிக் கொண்டு சென்றதால் உயிர்தப்பியதாகவும் கூறப்பட்டது.
இந்த சம்பவங்கள் வடிவேலின் காரில் இருந்த முன்பக்க டேஸ் கேமராவில் பதிவானது. இந்த காட்சிகளின் அடிப்படையில் வடிவேலன் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மேலூர் காவல்துறையினர் , ஜெகதீசன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சம்பவத்தன்று பணியில் இருந்த காவலர் மீது தினேஷ் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
காரின் முன்பக்க டேஸ் காமிராவின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக காவல் பணியில் இருந்து தினேஷை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.