​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாளை முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

Published : Nov 15, 2023 9:23 PM



நாளை முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

Nov 15, 2023 9:23 PM

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், கடலோர தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

நாளை முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுவதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஒடிசா கடலோர பகுதியை நோக்கிச்செல்லும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 18 ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.