9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
Published : Nov 15, 2023 6:43 AM
9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
Nov 15, 2023 6:43 AM
வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்.?
சென்னைக்கு 'பலத்த மழை' எச்சரிக்கை.!
சென்னைக்கு பலத்த மழைக்கான மஞ்சள் அலர்ட்
9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.!
புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்பு.!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது
வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும்
நாளை மறுநாள் திசையில் மாற்றம் ஏற்பட்டு, வடக்கு கிழக்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்க கடலில் ஒடிசா கடற்கரை அருகே செல்லக்கூடும்
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் கீழடுக்கு சுழற்சி எதிரொலியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் - மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு - வானிலை மையம்