​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், கனமழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Published : Nov 14, 2023 4:47 PM

தென் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், கனமழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Nov 14, 2023 4:47 PM

தென் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

விழுப்புரத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளநிலையில், 19 கிராம மீனவர்கள் கரையோரங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், குளச்சல், முட்டம், தேங்காய்ப்பட்டணம் துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட கடற்ரையோர கிராமங்களான உவரி, இடிந்தகரை, பஞ்சல், கூத்தங்குழி உள்ளிட்ட ஒன்பது கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

மயிலாடுதுறையில் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்த நிலையில், 16 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.