இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமது 5 நாள் இங்கிலாந்து பயணத்தில் நேற்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரோனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியதாக தமது எக்ஸ் பதிவில் தெரிவித்த ஜெய்சங்கர் மேற்கு ஆசியாவில் காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், உக்ரைன் ரஷ்யா இடையே நீடித்து வரும் யுத்தம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டோனி பிளேரையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். முன்னதாக அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பிரதமர் மோடி சார்பில் தீபாவளி வாழ்த்துகளை கூறியிருந்தார்.