உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டிவிட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தகவல்
Published : Nov 11, 2023 2:57 PM
உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டிவிட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தகவல்
Nov 11, 2023 2:57 PM
உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டிவிட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 26-ம் தேதியே, இந்த எண்ணிக்கை எட்டப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2000-ஆம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலக மக்களின் சராசரி வயது 32-ஆக அதிகரித்துள்ளதாகவும், வரும் 2060-ஆம் ஆண்டு இது 39-ஆக உயரும் என்றும், கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்திலேயே அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் 3 கோடியே 71 லட்சம் பேருடன் ஜப்பானின் டோக்கியோ முதலிடத்திலும், 3 கோடியே 29 லட்சம் பேருடன் டெல்லி 2-ம் இடத்திலும், 2 கோடியே 92 லட்சத்துடன் ஷாங்காய் 3-ம் இடத்திலும் உள்ளன.
சுமார் 1 கோடியே 18 லட்சம் மக்கள் தொகையுடன் சென்னை 26-ம் இடத்தை பிடித்துள்ளது.