​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காசா மருத்துவமனைகளில் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள்

Published : Nov 11, 2023 2:42 PM

காசா மருத்துவமனைகளில் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள்

Nov 11, 2023 2:42 PM

காசா நகரில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோருக்கு, மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், வலியால் துடிக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களின் அலறல் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது.

மயக்க மருந்து தீர்ந்துவிட்ட நிலையில், வலி நிவாரண மருந்துகளும் மிகக்குறைந்த அளவே உள்ளதால், காயமடைந்து வருவோருக்கு, அவர்களின் உயிரை காப்பாற்ற, வேறு வழியின்றி மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே செய்யப்படுவதாக கூறியுள்ளனர்.


இதனிடையே, காசா பகுதியில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக கூறினார்.