பிரேசில் அதிபர் லூயிஸ் லூலா டா சில்வா பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி 20 அமைப்புக்கு இந்தியாவைத் தொடர்ந்து தலைமை வகிக்க உள்ள பிரேசிலுக்கு பிரதமர் மோடி வாழ்த்தும் முழுமையான ஆதரவும் தெரிவித்தார்.
இரு தலைவர்களும் இருதரப்பு மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தனர். அப்போது இஸ்ரேல்-காசா யுத்தத்தில் அப்பாவி மக்கள் உயிரிழப்பு குறித்தும் போர் சேதங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கவலைகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.
இப்பிரச்சனையில் இஸ்ரேல் விரைவில் சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்