இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் ஆவண சேகரிப்பு தளத்தில் இருந்து கோவிட் காலத்தில் பதிவு செய்யப்பட்ட 81 கோடியே 50 லட்சம் இந்திய மக்களின் தனிநபர் தரவுகள் டார்க் நெட் மூலமாக கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தரவுகள் பகிரங்கமாக டார்க் நெட் வெப்பில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதார் பாஸ்போர்ட் விவரங்கள் பெயர்கள், தொலைபேசி எண்கள், மற்றும் முகவரிகள் அடங்கிய இந்த தரவுகளை கோவிட் பரிசோதனைகளின் போது ஐ.சி.எம்.ஆர் சேகரித்து வைத்திருந்தது.
ஒரு ஹேக்கர் மூலமாக தனிநபர் தகவல்கள் டார்க் நெட்டில் விளம்பரப்படுத்தட்டுள்ளது. இந்த தகவல்கள் களவாடப்பட்டது எப்படி என்பது தெளிவாகவில்லை என்பதால் சிபிஐ இது குறித்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.