கோத்தகிரியில் பேருந்துநிலையம் அருகே செயல்பட்டு வரும் சில்பா பேக்கரியில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், காலாவதியான கேக், ரொட்டி,ஹோம் மேட் சாக்லெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சில்பா பேக்கரியில் கேக்கை வாங்கிச்சென்ற பெண், வீட்டில் குழந்தைக்கு கொடுத்தபோது, அதை சாப்பிடாமல் குழந்தை துப்பியுள்ளது.
இதையடுத்து கேக்கை நன்றாக பிரித்து பார்த்த போது அடிபாகத்தில் பூஞ்சை படர்ந்து, துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுகுறித்து பேக்கரிக்கு சென்று கேட்டபோது, அந்த கேக்கை கொடுத்துவிட்டு புது கேக்கை வாங்கிக்கொள்ளுமாறு பேக்கரியின் உரிமையாளர் அலட்சியமாக தெரிவித்ததை தொடர்ந்து அந்த பெண் உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பேக்கரியில் இருந்த காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.