சேலத்தில் தீபாவளியையொட்டி ஆவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவின் இனிப்புகளின் விற்பனையை அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபனைத் தொடர்ந்து பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இனிப்புகளை பெற்றுக் கொண்டனர்.
இதன் மூலம் இந்தாண்டு சுமார் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.