நெய்வேலியில் ஓசியில் பிரியாணி கேட்டு ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக கடை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட கூலிப்படைத் தலைவன் பாம் ரவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரியாணி கடைக்கு வந்து தகராறு செய்த விக்கி, எழில்நிலவன் ஆகியோர் குறித்து சிசிடிவி ஆதாரத்துடன் கடை உரிமையாளர் கண்ணன் புகார் அளித்ததில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட விக்கி அங்கிருந்தபடியே, கண்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுக்க, ஜாமீனில் வெளிவந்த எழில்நிலவன், புதுச்சேரியை சேர்ந்த ரவுடி பாம் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் கண்ணனை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
எழில்நிலவன் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நெய்வேலி பகுதியில் பதுங்கியிருந்த பாம் ரவியை போலீசார் வளைத்து பிடித்தனர்.
ஆயுதங்கள் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அவனை அழைத்து சென்றபோது தப்பி ஓட முயன்று சுவர் ஏறி குதித்ததில் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான பிரசாத்துக்கும் காலில் அடிபட்ட நிலையில், சுபாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.