ஆவின் பாலின் விலையை உயர்த்த தற்போதைக்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், தீபாவளிக்கு கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய்க்கு ஆவின் பால் பொருட்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 149 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
கசியும் நிலையில் உள்ள பால் பாக்கெட்டுகளுக்கு ஆவின் சார்பில் இழப்பீடு வழங்குவதை மறைத்து சில முகவர்கள் பொதுமக்களிடம் அதனை விற்பனை செய்வதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக கொழுப்புச் சத்து, குறைவான கொழுப்புச் சத்து என தனித் தனியாக பிரித்து பால் விற்கப்படுவதாகவும், இதற்காக விலை உயர்த்தப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.