​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதல்முறையாக ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் அமெரிக்கா

Published : Oct 30, 2023 3:43 PM

முதல்முறையாக ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்யும் அமெரிக்கா

Oct 30, 2023 3:43 PM

ஃபுகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் வெளியேற்றியதை தொடர்ந்து அந்நாட்டு கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்திருந்த நிலையில், முதல்முறையாக ஜப்பானிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.

முதல் கட்டமாக 900 கிலோ கடல் ஆழிகளை இறக்குமதி செய்த அமெரிக்கா, ராணுவ கேண்டீன்கள் மற்றும் போர் கப்பல்களில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு அவற்றை பரிமாற திட்டமிட்டுள்ளது.

ஜப்பானின் மிகப் பெரிய கடல் உணவு இறக்குமதியாளரான சீனா கடந்தாண்டு ஒரு லட்சத்து 80 ஆயிரம் டன் கடல் ஆழிகளை இறக்குமதி செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.