ஜம்மு காஷ்மீரில் தினமும் தீவிரவாதிகளுடன் போராடும் காவல்துறைக்கு உதவியாக பயிற்சி பெற்ற 300 சிறப்பு கமாண்டோ வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர்.
தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு எற்ப நவீனரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. 43 காவல்நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்த கமாண்டோக்கள், தீவிரவாதிகளைத் தேடி அழித்து ஒழிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
முதல்கட்டமாக 21 காவல்நிலையங்களுக்கு ஏற்கனவே அதிநவீன வசதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 22 காவல்நிலையங்கள் தீவிரவாத ஒழிப்புப் பணிக்கான ஆயுதங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.