திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இயக்குனர் ரஞ்சித்தின் உறவினரை , காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மீஞ்சூர்- வண்டலூர் சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள பாலவேடு சுங்கசாவடியில் காங்கிரஸ் கட்சிக் கொடியுடன் சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. இந்த காரின் நம்பர் பிளேட் வித்தியாசமாக இருந்தால் சுங்கச்சாவடி கேமராவில் சரியாக பதிவாகவில்லை என்றும் ஸ்கேன் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது .
இதனால் ஆத்திரமடைந்த அந்த காரில் வந்த நபர்கள் சுங்கச்சாவடி ஊழியர் சந்திரசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு வந்த சுங்கச்சாவடி சூப்ரவைசரும் இயக்குனர் ரஞ்சித்தின் உறவினருமான நேசக்குமார் என்பவர் பிரச்சனை குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். அப்பொழுது காரில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் ஜெயம் மனோஜ் மற்றும் சிலர் நேசக்குமாருக்கு மிரட்டல் விடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முத்தாப்புதுப்பேட்டை காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரத்துடன் நேசகுமார் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.