இஸ்ரேல் காசா இடையே நடைபெறும் யுத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஐநா.பொதுசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அப்பாவி மக்களைப் பாதுகாக்கவும், மனித உரிமைகள் மற்றும் சட்டரீதியான பாதுகாப்பை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்துக்குஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த நிலையில், 14 நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. முன்னதாக, ஐநா.சபையின் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தரத் துணைப் பிரதிநிதியான யோஜனா பட்டேல், இருதரப்பினரும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் வன்முறையைக் கைவிடும்படியும், உடனடியாக போரை நிறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.