​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர்கள் பேட்டி

Published : Oct 27, 2023 9:10 PM



பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர்கள் பேட்டி

Oct 27, 2023 9:10 PM

பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஜாமீன் பெற்றுத்தந்தது பா.ஜ.க.வை சேர்ந்த வழக்கறிஞரா, அல்லது தி.மு.க. வக்கீல்களா என்ற கேள்விக்கு வழக்கறிஞர்கள் பதிலளித்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார், கருக்கா விநோத்துக்கு ஜாமீன் பெற்றுத் தந்தது தனது ஜுனியர்கள் இருவர் தான் என்றார்.

தாம் பா.ஜ.க.வில் இல்லை என்றும், தமது அனுமதியின்றி தமது பெயர் பா.ஜ.க. நிர்வாகிகள் பட்டியலில் சேர்த்து பின்னர் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருக்கா விநோத்துக்காக ஆஜரான முத்தமிழ் செல்வகுமாரின் ஜுனியர் வழக்கறிஞர்கள் இசக்கி மற்றும் நிசோக், தாங்கள் தி.மு.க.வில் இருந்தாலும் வழக்குக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்றும் தொழில் அடிப்படையில் ஜாமீன் பெற்றுத் தந்ததாகவும் கூறியுள்ளனர்.