​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓசி பிரியாணி கேட்டு தாக்கிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து கடை உரிமையாளர் கொலை 2 பேர் கைது

Published : Oct 27, 2023 8:49 PM

ஓசி பிரியாணி கேட்டு தாக்கிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து கடை உரிமையாளர் கொலை 2 பேர் கைது

Oct 27, 2023 8:49 PM

நெய்வேலியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்து உரிமையாளரை தாக்கிய வழக்கில் சிறை சென்றவர், ஜாமீனில் வெளியே வந்து அதே கடையின் உரிமையாளரை வெட்டி கொலை செய்துள்ளார்.

நெய்வேலி நகரில் பிரியாணி கடைகள் நடத்தி வந்த கண்ணன், நேற்று நெய்வேலி நீதிமன்றத்திற்கு பின்புற சாலையில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக, கண்ணனை தாக்கிய வழக்கில் ஏற்கனவே சிறை சென்று திரும்பிய எழில்நிலவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை சதி சிறையில்  திட்டமிடப்பட்டு, பிரபல ரவுடி பாம் ரவி மூலம் நிறைவேற்றப்பட்டது அம்பலமானது.

இந்த கொலை வழக்கில், எழில்நிலவன் அவரது கூட்டாளி சல்மான்கான் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், பாம் ரவி உள்ளிட்ட நால்வரை தேடி வருகின்றனர்.