​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.பி.சி.க்கு மாற்றாக புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றம்: அமித்ஷா

Published : Oct 27, 2023 6:36 PM

ஐ.பி.சி.க்கு மாற்றாக புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றம்: அமித்ஷா

Oct 27, 2023 6:36 PM

ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. மற்றும் சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய மசோதாக்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நடைபெற்ற ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றவர்களுக்கான நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சட்டங்களை நீக்கிவிட்டு புதிய நம்பிக்கையுடன் புதிய சகாப்தத்துக்குள் இந்தியா நுழைவதாக தெரிவித்தார்.

ஐ.பி.சி. உள்ளிட்டவற்றிற்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய சட்டங்களை நாடாளுமன்ற குழுவினர் ஆராய்ந்து வருவதாகவும், மக்களின் உரிமைகளை பாதுகாப்பதையே அந்த சட்டங்கள் முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.