தாங்கள் ஆளும் மாநிலத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்வார்கள் என்பது தெரிந்தே தி.மு.க. எப்படி அதைச் செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனநோயாளி ஒருவன் எங்கேயாவது எதையவாது வீசிச் சென்றால் அதற்கு தாங்கள் பொறுப்பாக முடியுமா என்றும் வினவியுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சிறைக்குள் திட்டம் தீட்டப்பட்டதாக தெரியவில்லை என்று கூறியுள்ள அமைச்சர், ஆளுங் கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாரோ சதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.