ராஜஸ்தானில் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோடசரா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்புடைய இடங்களில் ED சோதனை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக, மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் அரசின் பலன்கள் மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காக பாரதிய ஜனதா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, மேற்குவங்கத்தில், அம்மாநில வனத்துறை அமைச்சர் ஜோதிப்பிரியா மாலிக் தொடர்புடைய வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜோதிபிரியா மாலிக் உணவுத் துறை அமைச்சராக இருந்தபோது பொது விநியோகத் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது.