சீனாவின் ஆய்வுக் கப்பல் ஷி யான் இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
கடல் ஆய்வுக்கு மட்டுமின்றி எதிர்கால சீனக் கடற்படையின் இந்தியப் பெருங்கடல் செயல்பாடுகளுக்கு உளவுக் கப்பலாகவும் இது பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் ஆட்சேபத்திற்குப் பின்னரும் இக்கப்பல் கொழும்புவிற்கு வந்துள்ளது.இலங்கையுடன் சேர்ந்து அதன் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் கடல் வளம் குறித்த கூட்டு ஆய்வில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதே போல் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக் கோள் ஆய்வு கப்பல் இலங்கையின் தெற்கு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
அது இந்தியாவிடமிருந்து கடும் எதிர்ப்பைத் தூண்டியது. இதனிடையே, சீனக் கப்பலை எரிபொருள் நிரப்ப அனுமதித்துள்ள இலங்கை அரசு, அந்தக் கப்பல் எந்த ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளாது எனத் தெரிவித்துள்ளது.