அமெரிக்காவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஒன்றில் இளைஞன் ஒருவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மைன் மாகாணம் லீவிஸ்டன் நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு குற்றவாளியைப் பிடிக்க எல்லைகளுக்கு சீல்வைக்கப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை ஆண்ட்ரோஸ்கோஜின் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் வெளியிட்டது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து முகநூல் மூலம் குற்றவாளியின் படம் வெளியிடப்பட்டதுடன் பொது மக்களுக்கான எச்சரிக்கைகளும் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. வீடுகளுக்குள் கதவுகளை பூட்டியபடி பாதுகாப்பாக இருக்கு மாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்தநிலையில்
லீவிஸ்டனில் உள்ள வால்மார்ட் விநியோக மையத்தில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்