கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இன்றுமுதல் விசா சேவையைத் தொடங்குகிறது.
இதுகுறித்து ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகங்களில் இன்று முதல் விசா சேவைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவு விசா, மருத்துவம், வணிகம் மற்றும் முக்கிய கூட்டங்களுக்குச் செல்லும் வகையில் மாநாட்டு விசாக்கள் மட்டும் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, கனடா இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டின் காரணமாக, இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனால் விசா வழங்கும் நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.