ஹமாஸ் போராளி ஒருவர் தாம் யூதர்கள் ஏராளமானோரை கொன்றுவிட்டதாக தனது தந்தையுடன் பேசிய செல்போன் ஆடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.
இஸ்ரேலுக்குள் அக்டோபர் 7-ம் தேதி ஊடுருவிய ஹமாஸ் போராளி, வயதான தம்பதியரை கொன்றுவிட்டு, பின் அவர்களது செல்போனிலிருந்தே காஸாவில் வசிக்கும் தமது பெற்றோருடன் பேசியதாக கூறப்படுகிறது.
அதில், உங்கள் மகன் ஏராளமான யூதர்களை கொன்று விட்டதால் தலை நிமிர்ந்து நடக்குமாறு தாய் தந்தையரிடம் கூறும் அந்த போராளி, கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை வாட்ஸப்பில் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கிறார்.
பத்திரமாக திரும்பி வருமாறு மகனிடம் அந்த தாயார் கூறுவதும் உரையாடலில் இடம்பெற்றுள்ளது.