தென் கொரியாவில் கால்நடைகளுக்கு பரவிவரும் தோல் கழலை நோய் தடுக்க நாடு தழுவிய தடுப்பூசி திட்டம்
Published : Oct 25, 2023 7:14 PM
தென் கொரியாவில் கால்நடைகளுக்கு பரவிவரும் தோல் கழலை நோய் தடுக்க நாடு தழுவிய தடுப்பூசி திட்டம்
Oct 25, 2023 7:14 PM
கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயை தடுக்க நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற தென் கொரிய அரசு திட்டமிட்டுள்ளது.
செஜாங் மாகாண கால்நடை பண்ணை ஒன்றில் கடந்த வாரம் 29 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் உறுதி செய்யப்பட்டது.
மற்ற பண்ணைகளுக்கும் தொற்று பரவியதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுதும் உள்ள கால்நடைகளுக்கு, குறிப்பாக பசு மாடுகளுக்கு தடுப்பூசி போட தென் கொரியா முடிவு செய்துள்ளது.
இதற்காக 40 லட்சம் தடுப்பூசி டோஸ்களை பெற உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நவம்பர் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்பட்டால், நோய்த்தடுப்பு ஆன்ட்டிபாடிகள் 3 வாரத்தில் உருவாகி, நோய் பரவாமல் தடுக்கப்படும் என அந்நாட்டு வேளாண்துறை கூறியுள்ளது.