​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூடலூரில் செல்வம் செழிக்கும் எனத் தெரிவித்து ரைஸ்புல்லிங் மோசடியில் ஈடுப்பட்ட தந்தை மகனை கடத்திய கும்பல்

Published : Oct 25, 2023 5:24 PM

கூடலூரில் செல்வம் செழிக்கும் எனத் தெரிவித்து ரைஸ்புல்லிங் மோசடியில் ஈடுப்பட்ட தந்தை மகனை கடத்திய கும்பல்

Oct 25, 2023 5:24 PM

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ரைஸ்புல்லிங் மோசடியில் ஈடுபட்டதாக தந்தை மகனை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பாடந்துறையைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர், தன்னிடம் செல்வம் செழிக்க வைக்கும், சக்தி வாய்ந்த ரைஸ் புல்லிங் கலசம் இருப்பதாக கூறி எர்ணாகுளத்தை சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாலசுப்பிரமணி மற்றும் அவரது மகனை,  வீடுபுகுந்து அப்துல் அஜீஸ் காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக பாலசுப்பிரமணியின் மனைவி அளித்த புகாரின் பேரில் மசினகுடி பகுதியில் காரை மறித்து பாலசுப்பிரமணியனை மீட்ட போலீஸார் அப்துல்அஜீஸ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

மேலும் மோசடி செய்ததாக தந்தை மகன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.