அரூரில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை நள்ளிரவு நேரத்தில் இரும்புக்கம்பியால் தாக்கி சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேல்பாட்சாபேட்டை, கீழ்பாட்சாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் மர்ம நபர் ஒருவர் வாகனங்களை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
சிசிடிவி பதிவுகளை கொண்டு மர்ம நபரை போலீசார் தேடி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.