​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் தினமும் 6,000 மெ.டன் குப்பை உருவாகிறது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

Published : Oct 21, 2023 2:52 PM

சென்னையில் தினமும் 6,000 மெ.டன் குப்பை உருவாகிறது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

Oct 21, 2023 2:52 PM

சென்னையில், நாளொன்றுக்கு ஒருவர் சராசரியாக 700 கிராம் குப்பையை உருவாக்குவதாகவும், மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே சுகாதாரமான நிலையை எட்ட முடியும் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

பட்டினப்பாக்கத்தில் தீவிர தூய்மை பணியினை ஆய்வு செய்து சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், டெங்கு கொசு எப்படி பரவுகிறது, அதனை தடுப்பது குறித்து மாநகராட்சி பணியாளர்களுக்கு விளக்கினார்.

89 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னையில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை உருவாவதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், 25 இடங்களில் மக்கள் திடக்கழிவுகளை கொட்டி வருவதால் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.