தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்து உள்ளார்.
மேலும் எஸ்சி மற்றும் எஸ்டி குடும்பங்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக முலுகுவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
அதன்படி இட ஒதுக்கீடு எஸ்சி பிரிவினருக்கு18 சதவீதமாகவும், எஸ்டி பிரிவினருக்கு12 சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்று கூறினார். மேலும் ஒவ்வொரு ஆதிவாசி கிராம பஞ்சாயத்துக்கும் 25 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும், ஒரு வருடத்திற்குள் 2 லட்சம் வேலை காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். வேலையில்லாதவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்பதும் அவர் அளித்த வாக்குறுதி ஆகும்.