​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

Published : Oct 18, 2023 6:18 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

Oct 18, 2023 6:18 PM

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்கப்பட்டுள்ள இந்த உயர்வின்மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு கணக்கிடப்பட்டு வழங்கப்படுமென மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

மேலும் ரயில்வே துறையின் செயல்பாடுகள் இந்த ஆண்டு சிறப்பாக இருந்ததால், ரயில்வேயில் கெசடட் ரேங்க் அல்லாத தகுதியான ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

2024-25ம் ஆண்டுக்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.