சென்னையில் பதுங்கியிருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் லலித் பாட்டீல், மும்பை போலீசாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன் மும்பை சின்டகோன் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 267 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ எம்டிஎம்ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லலித் பாட்டீலைப் பிடிக்க பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
புனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லலித் பாட்டீல் தன்னை போலீசார் நெருங்குவதை அடுத்து அங்கிருந்து தப்பி சாலை மார்க்கமாக கர்நாடகம் வழியாக சென்னை வந்ததை அவருடைய செல்போன் தொடர்புகளை வைத்து போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, சென்னை வந்த மும்பை போலீசார், சென்னை விடுதி ஒன்றில் தங்கியிருந்த லலித் பாட்டீலை கைது செய்து விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.