ஹமாசுடன் நடைபெறும் யுத்தம் இருட்டுடன் நடத்தப்படும் யுத்தம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாகு வர்ணித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தின் உரை நிகழ்த்திய அவர், ஹமாசை ஹிட்லரின் கட்சியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
75 ஆண்டுகளுக்கும் மேலாக யூதர்களின் சுதந்திரத்திற்கான யுத்தம் நீடிப்பதாகக் குறிப்பிட்ட நேதான்யாகு, ஹமாசை அதிகாரபீடத்தில் இருந்து அழிப்பதுதான் இஸ்ரேலின் இலக்கு என்று கூறினார்.
இதனிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெரூசலேம் நகரங்களில் தொடர்ந்து சைரன்கள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் பதற்றமான சூழல் காணப்படுகிறது.