சென்னையில், கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கீழே தட்டி விட்டதால் 2 குழந்தைகளுக்கு சூடு போட்டு விட்டு தலைமறைவான தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான டில்லி கணேஷின் 4 மற்றும் 3 வயது மகன்கள் வீட்டில் விளையாடிய போது அவரது கையிலிருந்த கஞ்சா பொட்டலத்தை தட்டி விட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அவர் கரண்டியை தீயில் சுட வைத்து குழந்தைகளின் உடலில் பல இடங்களில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.
வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய தாய் யமுனா, காயமடைந்த குழந்தைகளை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார்.