​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேறு கிரகங்களுக்கு மனிதர்களை கொண்டுச் செல்லும் ராக்கெட் தயார்.. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Published : Oct 16, 2023 3:08 PM

வேறு கிரகங்களுக்கு மனிதர்களை கொண்டுச் செல்லும் ராக்கெட் தயார்.. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Oct 16, 2023 3:08 PM

வேறு கிரகங்களுக்கு மனிதர்களை சுமந்து செல்லும் பெரிய வகை ராக்கெட்டுகளை வடிவமைக்கும் பணி முடிவடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலத்தில் சோம்நாத் சந்தித்தார்.

முதலமைச்சருக்கு சந்திரயான்-3 மாதிரி உருவச்சிலையை வழங்கிய சோம்நாத், இன்னும் 2 ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் ஏவுதள பணி முடிவடையும் எனத் தெரிவித்தார். வானிலை மற்றும் கடல் சீராக இருக்கும் பட்சத்தில் வரும் 21-ம் தேதி ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் எனவும் சோம்நாத் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை பாடியில் உள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்த சோம்நாத், அவர் விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.