வாடகையை உயர்த்துவதுடன், கமிஷன் தொகையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போர்ட்டர் செயலியில் பதிவு செய்துள்ள ஓட்டுநர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள போர்ட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், போர்ட்டர் நிறுவனமே நேரடியாக வடமாநில தொழிலாளர்களை ஓட்டுநர்களாக வைத்து புதிய வாகனங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.