​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் கெடு

Published : Oct 13, 2023 3:36 PM

வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் கெடு

Oct 13, 2023 3:36 PM

வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் 11 லட்சம் பேர், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு பகுதிக்கு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் விதித்துள்ள கெடு சாத்தியமற்றது என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா அமைப்பினர் இடையேயான போர் 7வது நாளாக நீடிக்கும் நிலையில், எக்ஸ் வலைதளம் வாயிலாக இஸ்ரேல் பாதுகாப்பு படை விடுத்துள்ள செய்தியில் எகிப்து எல்லையை ஒட்டிய வாடி காசா பகுதிக்கு பாலஸ்தீனர்கள் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.

காசா மீது தரை வழித்தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ள இஸ்ரேல், டாங்கிகளை ஆயிரக்கணக்கில் எல்லையில் நிறுத்தி உள்ளது.

வடக்கு காசாவில் ஹமாஸ் பதுங்கு குழிகளை குறிவைத்து இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் விதித்துள்ள கெடு சாத்தியமற்றது என்று கூறியுள்ள ஐநா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், அவ்வாறு பொது மக்களை வெளியேற்றினால் மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.