இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் ஆபரேசன் அஜய்யின் முதல் விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
இஸ்ரேல்-காசா போர் நீடிப்பதால் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஆபரேசன் அஜய் என்ற திட்டத்தை அறிவித்தது.
ஏற்கனவே தூதரகத்தில் பதிவு செய்திருந்தவர்களில் 212 பேருடன் நேற்று இரவு டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது.
இன்று காலை டெல்லிக்கு வந்திறங்கியவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.
இந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 36 பேர் வந்திருப்பதாகவும், அவர்களை சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, இஸ்ரேலில் இருந்து தினம் ஒரு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது விமானம் இன்று புறப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.