​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுத்தர வர்க்கத்தினரை குறிவைக்கும் சீனத் தொடர்புடைய கடன் செயலிகள்.. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்

Published : Oct 12, 2023 7:00 AM

நடுத்தர வர்க்கத்தினரை குறிவைக்கும் சீனத் தொடர்புடைய கடன் செயலிகள்.. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்

Oct 12, 2023 7:00 AM

கடன் செயலிகள் மூலமாக பலர் கடன் வாங்கி கட்டமுடியாமல் துன்புறுத்தப்பட்டதால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனத் தொடர்புடைய சில செயலிகள் விரித்த கடன் வலையில் பலர் சிக்கி வருகின்றனர். விருதுவாங்கிய இசைக்கலைஞர், இளம் தாய் , இரண்டு மகள்களின் தந்தை, நான்கு பருவ வயதினர் போன்ற பலர் இதற்கு உயிரைப் பறிகொடுத்துவிட்டனர்.

இந்தியா ஆசியா ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த கடன் செயலிகள் இயங்கி வருவதாக பிபிசி நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்படுகிறது.