தமிழகத்தின் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்த மசோதாவில், சரக்கு ஏற்றிய பிறகு 3 டன் எடை இருக்கக் கூடிய வாகனங்களுக்கு ஆண்டு வரியாக 3,600 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 ஆயிரம் முதல் 5,500 கிலோ எடை வாகனங்களுக்கு காலாண்டு வரியாக 1,425 ரூபாய் முதல் 3,100 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. .
ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரியாக அதன் விலையில் 10 சதவீதமும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12 சதவீதம் வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.